காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே பழமையான இரு கற்சிலைகள் தோண்டி எடுக்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த தையூர் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாழ்ந்த பாப்பாத்தி அம்மன் கோவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேடாக இருந்த ஓரிடத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது இரு கற்சிலைகள் புதைந்து கிடந்தது கண்டறியப்பட்டது. சிலைக்கு பக்கவாட்டு பகுதிகளில் மூன்று அடி ஆழத்திற்கு மண்ணை தோண்டி எடுத்தபோது பழமையான கட்டுமானத்துடன்கூடிய செங்கற்களும் மண்ணுடன் வந்தது. பீடத்துடன் கூடிய இரண்டரை அடியில் ஒரு சிலையும் மற்றும் ஒன்றரை அடி உயரத்தில் மற்றொரு சிலையும் புதைந்திருந்தது. மீட்கப்ப்ட்ட இரு சிலைகளும் வருவாய்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Discussion about this post