அரவக்குறிச்சி தொகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவ படை வீரர்களின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு வரும்19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து கடந்த 22ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. அரவக்குறிச்சி தொகுதியில் 250 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 29 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையமும், காவல்துறையும் தேர்தல் நடத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதையொட்டி பொது மக்கள் மற்றும் வாக்காளர்கள் சுதந்திரமாக அச்சமின்றி வாக்களிப்பதற்காக, குஜராத் மாநிலத்தில் இருந்து 245 துணை இராணுவ படை வீரர்கள், அரவக்குறிச்சி பள்ளப்பட்டி நகர் பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
Discussion about this post