ஒசூரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்த கொடிய விஷ பாம்புகள் பிடிக்கப்பட்டு, வனப் பகுதிக்குள் விடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நகர குடியிருப்பு பகுதியில் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் அதிகளவில் உலா வருவதாக மக்கள் தெரிவித்தனர். விகாஷ் நகர், சிப்காட் குடியிருப்பு பகுதி, மந்தகிரி உள்ளிட்ட பகுதிகள் கண்ணாடி விரியன், நாக பாம்புகள் புகுந்துள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து அங்கு சுற்றிவந்த 4 பாம்புகள் பிடிக்கப்பட்டு, பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.
Discussion about this post