பெரம்பலூரில் அவதூறு தகவல்களை பரப்பியதாக வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கறிஞர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெரம்பலூரில் எம்எல்ஏ தமிழ்செல்வன் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக வழக்கறிஞர் அருள் என்பவர் புகார் அளித்திருந்தார். திட்டமிட்டு அரசியல் ரீதியாக தமிழ்செல்வனை ஒடுக்கும் நோக்கத்துடன் இந்த புகாரை அவர் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் நலச்சங்கத்தினர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்காத நிலையில், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் நோக்கில் வழக்கறிஞர் அருள் பொய்யான செய்தியை பரப்பி வருவதாக அவர்கள் தங்களது மனுவில் தெரிவித்தனர்.
வழக்கறிஞர் அருள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக மகளிரணி சார்பிலும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வழக்கறிஞர் அருளை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post