வேலூர் மக்களவைத் தேர்தல் நிறுத்தப்பட்ட நிலையில், அங்கு எப்போது தேர்தல் நடந்தாலும், அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் கே.சி. வீரமணி மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய, அமைச்சர் கே.சி.வீரமணி, எப்போது தேர்தல் வந்தாலும், அதிமுக கூட்டணி கட்சி வெற்றி பெறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் வெற்றியை தடுக்க யாராலும் முடியாது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய புதிய நீதி கட்சித் தலைவரும், வேலூர் தொகுதி வேட்பாளருமான ஏ.சி.சண்முகம், வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் தேர்தல் நிறுத்தப்பட்டது துருதிர்ஷ்டவசமானது என்றும், இதற்கு காரணம் திமுகவின் பொருளாரும், அவரது மகனும் தான் என குற்றம்சாட்டினார்.
Discussion about this post