இட்லிப் மாகாணத்தில் அரசு படைகளுக்கும் போராளிக் குழுக்களுக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இதனால், அங்கு வசிக்கும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், சர்மாடா நகரில் உள்ள அரசு ஆயுத கிடங்கில் பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சுமார் 50 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
Discussion about this post