முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு குறித்து துணைக் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்ச நீதிமன்றம் நியமித்த மூவர் குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 112.80 அடியாக குறைந்துள்ள நிலையில் சரவணக்குமார் தலைமையிலான குழுவினர் அணையை ஆய்வு செய்தனர். மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, மதகுப்பகுதி ஆகிய பகுதிகளில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து குமுளியில் உள்ள பெரியாறு அணை கண்காணிப்பு குழுவின் அலுவலகத்தில் துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
Discussion about this post