இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து அதிகாரிகள் பலர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு நிகழ்ந்ததற்கு பிறகு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, காவல் துறை உயர் அதிகாரி பூஜித் ஜயசுந்தர ஆகியோரை இராஜினாமா செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் புதிய காவல் துறை சிறப்பு அதிகாரியாக சி.டீ. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் புதிய பாதுகாப்புச் செயலாளராக ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சாந்த கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். மேலும் இலங்கை மக்களின் பாதுகாப்புக்காக அந்நாட்டு அரசால் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
Discussion about this post