உதகையில் ஒரு வாரகாலமாக மழை பெய்து வரும் நிலையில், இன்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர் மட்டம் சற்று உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், இன்று மாலை 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பிங்கர் போஸ்ட், தலைகுந்தா, சோலூர், நஞ்சநாடு, கேத்தி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
Discussion about this post