மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள கோவில்கள் ரயில் நிலையங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுழற்சி முறையில் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு பணிகள் குறித்து தமிழக சிறப்பு பாதுகாப்பு படையின் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தன் தலைமையில் மூன்று ஆய்வாளர் உட்பட 10 பேர் கொண்ட குழு அய்வு மேற்கொண்டது. கோவிலில் நான்கு கோபுரங்கள், சாமி சன்னதி, கண்காணிப்பு கேமராக்கள், கட்டுப்பாட்டு அறை மற்றும் தீயணைப்புத் துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் தொடர்ந்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Discussion about this post