தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளநிலையில், கேரளாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள அணைகள், நிரம்பியதையடுத்து, ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளன. கனழைக்கு 37 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழை, வெள்ள பாதிப்புகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத் சிங், கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக 100 கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், மழை, வெள்ளத்திற்கு 8 ஆயிரத்து 316 கோடி ரூபாய் அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடுமையாக சேதம் என்பதால், முதற்கட்டமாக400 கோடி ரூபாய் நிவாரண நிதியாக உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Discussion about this post