திருவண்ணாமலையில் இறைச்சி கழிவுகளை சாலையில் கொட்டுவோர் மிது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேரூராட்சி நிர்வாகத்திடம் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள குப்பைக் கிடங்கின் வெளிப்புற சாலையில் இறைச்சிக்கடை உரிமையாளர்கள் இரவில் இறைச்சி கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், பாதுகாப்பான சூழல் இல்லாததாகவும் பொது மக்கள் பேரூராட்சி நிர்வாகத்தை நாடியுள்ளனர். இரவில் தொடர்ந்து இப்படி இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி அலுவலரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post