18 -வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தா (Jakarta) மற்றும் பாலம்பேங்கில். (Palembang) வரும் 18 ம் தேதி தொடங்குகின்றன. செப்டம்பர் 2 -ம் தேதி வரை இந்தப் போட்டிகளில் இந்தியா உட்பட ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 45 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா சார்பில் 572 வீரர், வீராங்கனைகள் 36 வகையான விளையாட்டுகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். தொடக்க விழாவில் இந்தியாவின் தேசியக் கொடியை ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா ஏந்திச் செல்கிறார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 20 வயதான நீரஜ் சோப்ரா, ஜூனியர் உலக தடகள போட்டியிலும், காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post