ஆந்திர மாநிலத்தில், வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால், மண்பாண்டப் பொருட்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது.
பொதுவாக மண்பாண்டப் பொருட்களில் வைக்கப்படும் நீர், குளிர்ச்சியாக இருப்பதால், வெயில் காலங்களில் அதன் தேவை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், மே மாதம் நெருங்குவதையொட்டி, ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில், குளிர்ச்சியைத் தக்கவைக்கும் மண்பாண்டப் பொருட்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, நகரின் முக்கிய பகுதிகளில், மண்பானை வடிகட்டிகள், விதவிதமான மண்பாண்ட குடுவைகள், மண் கொண்டு உருவாக்கப்பட்ட ஜாடிகள், மண் குடங்கள் ஆகியவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
Discussion about this post