இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மதுரை விமான நிலையத்தில் மத்திய உளவுத்துறை எச்சரிக்கையால், 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய துணை ராணுவப்படை துணை தளபதி மெஹந்தி தலைமையில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விமான நிலைய உள்வளாகம், விமான ஓடுபாதை, மற்றும் வெளி வளாகங்களில் வெடிகுண்டி தடுப்பு பிரிவு, மோப்ப நாய்கள் மற்றும் ரோந்து வாகனங்கள் பாதுகாப்புப் பணியில் சுற்றி வருகின்றனர். மேலும் இலங்கையிலிருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக பயணிகளுடன் வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post