தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தையடுத்து, தீவிர சோதனை மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் நடவடிக்கைகளால் இலங்கையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
தொடர் குண்டு வெடிப்பு காரணமாக அந்நாட்டில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனையடுத்து, கல்முனை பகுதியில் பயங்கரவதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடத்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். அப்போது ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில், பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே ஒரு கிலோ வெடிபொருட்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 சக்கர வாகனத்தில் சி4 வெடிபொருட்களுடன் 3 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதுவரை 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பந்துறை என்ற பகுதியில் இருந்து குவியல் குவியலாக வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post