காஞ்சிபுரத்தில் திருமணம் செய்ய மறுத்த பயிற்சி செவிலியரை கத்தியால் குத்திய வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
காஞ்சி மாவட்டம் எச்சூர் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். வண்டலூரைச் சேர்ந்த முத்து என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கும்படி ஜெயந்தியை வற்புறுத்தியுள்ளார். இதனை ஏற்க மறுத்த அவரை மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயந்தியின் தோள்பட்டையில் குத்திவிட்டு அங்கிருந்து முத்து தப்பி சென்றார். இதில் ஜெயந்தி தோள்பட்டை, கை போன்ற பகுதிகளில் வெட்டு விழுந்து படுகாயத்துடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் போலீசார் தேடுவதை அறிந்த முத்து மருத்துவமனை அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் முத்துவை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post