சர்வதேச புவி தினத்தை கொண்டாடும் வகையில் பாக் ஜலசந்தி கடலுக்கு அடியில் தேங்கி கிடந்த ப்ளாஸ்டிக் பொருள்களை ஸ்கூபா டைவிங் வீரர்கள் சுத்தப்படுத்தினர்.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22 ஆம் தேதி உலக புவி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையினர் சார்பில் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் ஸ்கூபா டைவிங் என்று சொல்லப்படக்கூடிய ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்கள் 10 பேர் சேர்ந்து கடலுக்கடியில் சேர்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இவர்கள், ஒரு மணி நேரத்தில் 25 கிலோ அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை கடலுக்கு அடியில் இருந்து அகற்றினர். கடலில் ஒவ்வொரு வருடமும் 8 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் சேரும் நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வனத்துறையினர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
Discussion about this post