நாமக்கல் குழந்தைகள் விற்பனை சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ய 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா என்பவர் தரகராக இருந்து குழந்தைகளை வாங்கி, விற்று வந்துள்ளார். கடந்த 30 வருடங்களாக தங்கு தடையின்றி இந்த விற்பனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. செவிலியர் அமுதா, குழந்தை விற்பனை தொடர்பாக தம்பதியிடம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவில் ஓமலூர் மற்றும் கொல்லிமலை பகுதிகளில் 3 குழந்தைகளை பெற்று விற்பனை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் ஈரோடு தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீன் என்பரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ராசிபுரம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த 4500 குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களை சரிபார்க்க 10 நபர்கள் அடங்கிய 10 குழுக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், கொல்லிமலையில் வீட்டில் பிறந்த குழந்தைகளின் விவரங்களையும் தத்துக்கொடுத்த ஆவணங்களையும் ஆய்வு செய்ய 5 நபர்கள் அடங்கிய 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Discussion about this post