அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் 99 வயதான இசேபியா லியோனார் கார்டல் என்ற பாட்டி படிப்பின் மீது தீரா ஆர்வம் கொண்டதன் காரணமாக தற்போது அவர் பள்ளியில் சேர்ந்துள்ளார்.
சிறுவயதில் குடும்பச் சூழல் காரணமாக பாதியிலேயே பள்ளியில் இருந்து நிறுத்தப்பட்டார்.
தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இசேபியாவிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட அவர், அடல்ட்ஸ் ஆப் லப்ரிடா பள்ளியில் சேர்ந்தார்.
இந்த பள்ளியில் வாசிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்ட இசேபியா விரைவில் கணினியையும் உபயோகிக்க கற்று கொள்ளவுள்ளார்.
குறைந்த வயதுள்ளவர்களே பல்வேறு உடல்நிலை குறைபாடுகளைக் காரணம் காட்டி பாடசாலை, கல்லூரி மற்றும் அலுவலத்தில் விடுமுறை எடுக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் 99 வயதான இசேபியா இதுவரை ஒருநாள் கூட பாடசாலைக்கு விடுமுறை எடுத்ததில்லையாம்.
இந்த நிலையில் 99 வயதான இசேபியா பாட்டிக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Discussion about this post