சென்னையில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி முதல்வர் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பச்சையப்பன் கல்லூரி முதல்வராக சேட்டு என்பவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரியைச் சேர்ந்த 7 பேராசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், தற்போதைய கல்லூரி முதல்வர் நியமனத்தை ரத்து செய்தும், கல்லூரி முதல்வர் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்கவும் உத்தரவிட்டார்.
Discussion about this post