மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் வாழ்க்கை குறித்த பாகினி திரைப்படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானார்ஜியின் ஆரம்ப வாழ்க்கையிலிருந்து, முதலமைச்சர் ஆனது வரையிலான கதை பாகினி என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. இந்நிலையில் அதன் டிரைலர் அண்மையில் வெளியிடப்பட்டது. மேலும் இப்படம் மே3ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால், பாகினி திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்தது. இதைத்தொடர்ந்து, பாகினி படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. வரும் மே 3ஆம் தேதி திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் பட டிரைலர் மற்றும் திரைப்படத்துக்கு தேர்தல் ஆணையம் இடைக்கால தடை விதித்துள்ளது.
Discussion about this post