செல்ல பிராணிகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கு சேலம் அரசு கால்நடை மருத்துவமனையில் நவீன அறுவை சிகிச்சை கூடம் தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் ப்ரட்ஸ் சாலையில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 150க்கும் மேற்பட்ட செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள செல்லப்பிராணிகளுக்கு அதிநவீன கருவிகள் மூலம் பாதுகாப்பாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள புதிய தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு தொடங்கப்பட்டுள்ள கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை பயன்படுத்திக்கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post