தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் நவ்ஜோத்சிங் சித்துவுக்கு தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்துள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதால், இன்று காலை முதல் 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் பங்கேற்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அவர் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிக்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
முன்னதாக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்துக்கு 72 மணி நேரமும் பகுஜன் சமாஜ்வாடி கட்சித்தலைவர் மாயாவதிக்கு 48 மணி நேரமும் மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு 48 மணி நேரமும் தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.
Discussion about this post