இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் இருந்து நடிகை ராதிகா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
ஈஸ்டர் தினமான இன்று கொழும்பில் உள்ள புகழ் பெற்ற கொச்சிகடை அந்தோணியார் தேவாலயம், மட்டக்களப்பு கட்டுவாபிட்டியா தேவாலயம், நீர்க்கொழும்பில் உள்ள தேவாலயம், கிங்ஸ் பெர்ரி ஆகிய 4 தேவாலயங்களில் குண்டு வெடிப்பு நிகழந்ததில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். சான் கிரில்லா, சின்னாமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் 102 பேர் உயிரிழந்து உள்ளனர்.300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குண்டுவெடிப்பை தொடர்ந்து இலங்கையில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவத்தை தொடர்ந்து இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் இருந்து நடிகை ராதிகா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.’கொழும்பு,சின்னாமன் கிராண்ட் ஓட்டலில் இருந்து நான் வெளியேறிய சில நிமிடங்களில் குண்டு வெடித்தது நம்பமுடியவில்லை,இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது எனவும்,கடவுள் நம்மோடு இருக்கிறார்’என கூறியுள்ளார்.
OMG bomb blasts in Sri Lanka, god be with all. I just left Colombo Cinnamongrand hotel and it has been bombed, can’t believe this shocking.
— Radikaa Sarathkumar (@realradikaa) April 21, 2019
Discussion about this post