144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் இயல்புநிலை திரும்பி வருகிறது.
வாட்ஸ் ஆப்பில் பரவிய ஆடியோவில், ஒரு சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக கூறி பொன்னமராவதியில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் காவல்துறையினரின் வாகனங்கள் கல்வீசி சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொன்னமராவதியில் தற்பொழுது அமைதியான சூழ்நிலை நிலவிவருகிறது .பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுவருகின்றனர் .
அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளியூர் செல்லும் பேருந்துகளும் வழக்கம் போல இயங்கி வருகின்றன.ஜவுளிகடை நகைக்கடை , மருந்துக்கடைகள், உணவு விடுதிகள் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் 144 தடை உத்தரவு ஞாயிறு மதியம் 12 மணி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post