கடலூர் மாவட்டம் வடலூர் அருகே, தேமுதிக ஊராட்சி செயலாளரை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராசாக்குப்பம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார், தேமுதிகவின் ஊராட்சி செயலாளராக உள்ளார். இவர் தனது வயல்வெளியில் உள்ள கொட்டகையில் தூங்கிகொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவரை அறிவாளால் வெட்டிக்கொலை செய்ய முயற்சித்தனர். அதிகாலையில் அவ்வழியாக சென்ற கிராம மக்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செந்தில்குமாரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post