சென்னையில் கஞ்சா விற்று வந்த 9 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
டிபி சத்திரம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய வளாகப் பகுதிகளில் கஞ்ச விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்பனைக்கு வந்த குணசேகரன், ஞானசேகரன், கீர்த்திவாசன், சரத்குமார்,தமிழரசன், செந்தில்குமார், உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Discussion about this post