திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் இயற்கை அழகை கண்டுகளிக்க அரசு சார்பில் குறைந்த கட்டணத்தில் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் தற்போது சீசன் துவங்கியுள்ளதால், இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்குள்ள சுற்றுலா தளங்களை கண்டுகளிக்க தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் குறைவான கட்டணத்தில் சிறப்பு போக்குவரத்து வசதி செய்து தரப்பட்டுள்ளது.
இதன்மூலம் கொடைக்கானலின் முக்கிய சுற்றுலாதளங்களான கோக்கர்ஸ் வாக், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட 12 இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கலாம். கூட்டத்தை பொருத்து ஒருநாளில் 3 முதல் 5 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் வரும் மே மாதம் 31ம் தேதிவரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post