மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 63 புள்ளி 73 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக, சிதம்பரம் மக்களவை தொகுதியில், 70 புள்ளி 73 சதவீத வாக்குகளும், குறைந்த பட்சமாக கன்னியாகுமரி தொகுதியில் 55 புள்ளி 07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 18 தொகுதி இடைத் தேர்தலை பொறுத்தவரை, ஒட்டுமொத்தமாக 67 புள்ளி 08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அதிகபட்சமாக அரூரில் 79 புள்ளி 91 சதவீத வாக்குகளும், குறைவாக பெரியகுளம் தொகுதியில் 51 புள்ளி 4 சதவீத வாக்குகளும் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
Discussion about this post