மக்களவை தேர்தலையொட்டி, நாமக்கல் போதமலையில் உள்ள மலைக் கிராமங்களுக்கு தேர்தல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் வாக்கு பதிவு இயந்திரங்களுடன் பயணப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள போதமலையில் மேலூர், கீழூர் மற்றும் கெடமலை ஆகிய 3 குக்கிராமங்கள் உள்ளன. போக்குவரத்து வசதி இல்லாத இந்த மலைக் கிராமங்களில் 1,200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் மலை கிராம மக்கள் வாக்களிக்க வசிதயாக வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை தேர்தல் அலுவலர்கள் கொண்டு சென்றனர். தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மலைப் பாதையில் தலைச்சுமையாக தேர்தல் பொருட்களை எடுத்துச் சென்றனர்.
Discussion about this post