கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே 600 ஆண்டு பழமையான வெங்கடரமண சுவாமி கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
ஒசூரை அடுத்த கோபச்சந்திரம் கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமையான வெங்கடரமண சுவாமி கோயில் அமைந்துள்ளது. தக்ஷன திருப்பதி என்றும், தமிழகத்தின் திருப்பதி என்றும் அழைக்கப்படும் இந்த கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய வெங்கடரமண சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிந்தா, கோவிந்தா என்ற முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பெருமாளை சேவித்தனர். தேரோட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Discussion about this post