மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற பட்டாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரர் பிரியாவிடை தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேக விழா ஆறுகால் பீடத்தில் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கீரீடம் சாற்றி, செங்கோல் வழங்கப்பட்டது. பட்டாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Discussion about this post