நாடாளுமன்ற தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெறும் நிலையில், தேசிய மற்றும் மாநில கட்சிகள் அனைத்தும் ஊடகம் வாயிலாக விளம்பரங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுகவின் ஆதரவு நாளிதழான தினகரன் வலைதளத்தில் பிஜேபி கட்சியின் தேர்தல் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன.
தினகரன் இணைய தளத்தின் முன்பக்கத்தில் மோடியின் விளம்பர படமும், தாமரைக்கே வாக்களிப்போம் என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. மற்றொரு பக்கம் மோடியின் சாதனை குறித்து 1 நிமிடத்திற்கு மேலான விடியோவும் இடம் பெற்றுள்ளன. ஒருபுறம் மோடியையும், பிஜேபி கட்சியையும் கடுமையாக விமர்சித்த வரும் திமுக பணத்திற்காக மற்றொரு புறம் தன்னுடைய ஆதரவு இணைய தளமான தினகரன் நாளிதழ் இனைய தளத்தில் பிஜேபி-விற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த நிகழ்வையும், திமுக-வையும் வலைதள விமர்சர்கள் கலாய்த்து வருகின்றனர்.
Discussion about this post