தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் மேல் தகித்ததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் , 100 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. பாளையங்கோட்டை, தொண்டி நகரில் தலா 100 டிகிரியும், கோவையில் 102 டிகிரியும் வெயில் அதிகரித்து காணப்பட்டது. மதுரை, திருச்சி, வேலூர், தருமபுரியில் தலா 103 டிகிரியும் வெப்பநிலை இருந்தது. மேலும் அதிகபட்சமாக சேலம், திருத்தணியில் தலா 104 டிகிரி வெப்பநிலை பதிவானது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும் என்றும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், சராசரி வெப்பநிலையை விட, ஒரு டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படும் என்றும் கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
Discussion about this post