காங்கிரஸ் அறிவித்துள்ள ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் சம்பளம் மற்றும் வருமான அளவு குறித்த விவரம் எதுவும் இல்லாமல் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். பயனாளிகளின் தேர்வில் முறைகேடு நடக்கும் என்று எச்சரித்துள்ள பியூஸ் கோயல், இந்தத் திட்டத்தினால் காங்கிரசின் ஊழல் பட்டியலில் புதியதாக ஒரு ஊழல் சேரும் என்றும் குறிப்பிட்டார்.
3 தலைமுறைகளாக கவர்ச்சியான கோஷங்கள் மூலம் காங்கிரஸ் மக்களை ஏமாற்றியதாக குற்றம்சாட்டிய அவர், கவர்ச்சிகரமான கோஷங்கள் மூலம் மக்களை மீண்டும் ஏமாற்ற முடியாது என்று எச்சரித்தார்.
Discussion about this post