தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் ரவீந்தரநாத் குமார் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற வேட்பாளர் லோகிராஜனை ஆதரித்து நடிகை விந்தியா வாக்கு சேகரித்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பிரசாரம் மேற்கொண்ட விந்தியா, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்த தேர்தல் வெற்றியை பரிசாக வழங்க வேண்டும் என்றும் ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது, மக்கள் பிரச்னைக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் நடிகை விந்தியா குற்றம்சாட்டினார்.
Discussion about this post