கோவை தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், பொள்ளாச்சி மக்களவை தொகுதி வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பிரசாரம் மேற்கொண்டார்.
பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மகேந்திரன், வீதி வீதியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில், தொண்டாமுத்தூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கேந்திரிய வித்யாலயா பள்ளிக்காக தனது நிலத்தை இலவசமாக கொடுத்தவர் மகேந்திரன் என்று குறிப்பிட்டார். திமுக வேட்பாளர், பத்து வருடங்கள் கழித்து வாக்கு சேகரிப்பதற்காக மட்டுமே தொகுதிக்கு வந்துள்ளார் என்றும் அமைச்சர் விமர்சித்தார்.
Discussion about this post