திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 3 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளநிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு பகலாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மூலச்சத்திரத்தில் நடைபெற்ற மதுரையிலிருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்தில் வந்த தங்கப்பாண்டி என்பவர் உரிய ஆவணமின்றி வைத்திருந்த 2 லட்சத்து 59 ஆயிரத்து 500 ரூபாயும், அதேபோல் தாராபுரம் சாலை நாகணம்பட்டி பிரிவில் நடைபெற்ற சோதனையில் திருப்பூரைச் சேர்ந்த சிவானந்தம் என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த 1 லட்சத்து 13ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்யப்பட்டது.
இரு வேறு இடங்களில் பறிமுதல் செய்த 3 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் முத்துச்சாமி முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டு கருவூலத்தில் வைக்கப்பட்டது.
Discussion about this post