குற்றாலத்தில் உள்ள பழமை வாய்ந்த குற்றாலநாதர் கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து குற்றாலநாதரை வழிபட்டனர்.
குற்றாலத்தில் உள்ள பழமை வாய்ந்த குற்றாலநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் இங்கு சித்திரை விசு திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 5ம் தேதி இந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் குற்றாலநாதர் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிலையில் 5ம் நாளான இன்று விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. குற்றாலநாதர், அம்மன், முருகன், விநாயகர் வீற்றிருந்த நான்கு தேர்கள் இடம்பெற்ற நிலையில், தேரோட்டத்தில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள், வடம் பிடித்து இழுத்தனர்.
Discussion about this post