மேலூர் அருகே உரிய ஆவணங்களின்றி கண்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற பாத்திரங்களை தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கத்தப்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டெல்லியில் இருந்து மதுரை நோக்கி வந்த கண்டெய்னர் லாரியை மறித்து சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்களின்றி 44 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பாத்திரங்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் மேலூர் தாலுகா அலுவகத்தில் கண்டெய்னர் லாரியை ஒப்படைத்தனர்.
Discussion about this post