வளிமண்டலத்தில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் இன்று மேலும் 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் வளி மண்டலத்தில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post