எர்ணாகுளம்-வேளாங்கண்ணி கோடைகால சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கேரளமாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சனிக்கிழமைதோறும், வரும் 3 மாதங்களுக்கு, கோடைக்கால சிறப்பு ரயிலை இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அண்மையில் அறிவித்தது. அதன்படி, நேற்று காலை, எர்ணாகுளத்தில் 11 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் செங்கோட்டைக்கு மாலை 6.35 மணிக்கு வந்தது.
குறிப்பாக, வேளாங்கண்ணிக்கு சென்ற இந்த ரயிலில் கேரள பயணிகள் கூட்டமும், வியாபாரிகள் கூட்டமும் அலைமோதியது. அப்போது எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post