திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, மாணவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க சுவரில் வரைந்த ஓவியங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.
செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளி மாணவர்கள், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்களின் பெற்றோர்கள் 100% வாக்களிக்க வலியுறுத்தி, சுவர்களில் ஓவியம் வரைந்துள்ளனர். இந்த சுவர் ஓவியங்களை, மாவட்ட ஆட்சியர் கே.எஸ் கந்தசாமி பார்வையிட்டு, மாணவர்களை பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் எழுது பொருட்களை நினைவுப் பரிசாக வழங்கினார். பள்ளி வளாகத்தில், ஸ்கவுட் மாணவர்கள் அமைத்த குடிசையை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பொதுமக்களுடன் இணைந்து, வீடு வீடாக சென்ற மாவட்ட ஆட்சியர், மாணவர்கள் வரைந்துள்ள பல்வேறு வகையான சுவர் ஓவியங்களையும் பார்வையிட்டு, மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
Discussion about this post