வாக்காளர் புகைப்படம் மற்றும் அனைத்து விவரங்களுடன் கூடிய பூத் ஸ்லீப் விநியோகம் செய்யப்படும் என்று ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் ஸ்லீப்களை அரசியல் கட்சியினர் வழங்குவதற்கு தடை விதித்த தேர்தல் ஆணையம், பூத் ஸ்லீப்களை தானே வழங்கி வருகிறது. இந்த நிலையில் வாக்காளர்களின் புகைப்படம், முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய பூத் ஸ்லீப்கள் தேர்தலின் போது வழங்கபட உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பூத் சிலிப்கள் வழங்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Discussion about this post