பாஜக தேர்தல் அறிக்கையை வரும் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் வெளியிடுகின்றனர்
மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு 6 நாட்களே உள்ள நிலையில் பாஜக தேர்தல் அறிக்கை வரும் 8 ம்தேதி வெளியாக உள்ளது. நடுத்தர, நகர்புற மக்களின் வாக்குகளை பெற சலுகைகள், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை திட்டங்களை முறியடிக்கும் வகையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு, தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு மாதம் 6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Discussion about this post