கோவை நாடாளுமன்ற வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணனை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்க உள்ள நிலையில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அதிமுக கூட்டணியை சேர்ந்த பாரதிய ஜனதா வேட்பாளரான சி.பி ராதாகிருஷ்ணன் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Discussion about this post