தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில், தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் பல்வேறு இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் ஒரு குழுவை அமைத்து பணப்பட்டுவாடாவை தடுக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கே.கே.ரமேஷின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த மனுவை உடனடியாக எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை கூறியுள்ளனர்.
Discussion about this post