சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் தங்க நாணயங்கள் சிக்கியது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் ஏற்காடு தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கும்பகோணத்தில் இருந்து வந்த வேனை மடக்கி சோதனை மேற்கொண்டதில் 100 கிலோ அளவிற்கு தங்க நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் சேலத்தில் உள்ள தனியார் நகை கடைக்கு தங்க நாணயங்கள் எடுத்து செல்லப்படுவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த ஆவணங்களின் உண்மை தன்மையை தேர்தல் அதிகாரிகளும், வருமான வரித்துறையினரும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Discussion about this post