திமுக தலைவர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த பொதுக்கூட்டத்தில், மேடையில் அமர்ந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயனைஆதரித்து,பெருமாநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்பொழுது, மேடையில் அமர்ந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உறங்கியபடி இருந்தார். பின்னால் இருந்த நபர் முத்தரசனை எழுப்பியபோதும், சிறிது நேரத்துக்கு பின் முத்தரசன் மீண்டும் உறங்கினார்.
அதே போல் திமுகவின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜிம் உறங்கியபடி இருந்தார். ஸ்டாலினின் உரையை கூட்டணி கட்சி தலைவர் மற்றும் திமுகவை சேர்ந்தவர்களே கண்டுகொள்ளாமல் தூங்கி வழிந்த சம்பவம், மக்கள் மத்தியில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது
Discussion about this post